கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக சில எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மரணம்

கடந்த சில நாட்களுக்கு முன் வசந்தகுமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை கூறியது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால், சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here