தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, தற்போது மீண்டும் நடிக்க வர உள்ளதாக தெரிகிறது.
முன்னணி நடிகை
1990களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் அனைவரையும் கவர்ந்த ரம்பாவுக்கு, பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பொங்காலி, போஜ்புரி ஆகிய மொழிப் படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை ரம்பா திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு அமெரிக்காவில் செட்டில் ஆன ரம்பாவுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மீண்டும் சினிமா?
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் அதே இளமையோடு காட்சி தருகிறார் ரம்பா. தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், விரைவில் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்டரி கொடுப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.















































