நடிகை தமன்னாவின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், படப்பிடிப்புக்காக வெளியே செல்லும் பல நட்சத்திரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான பச்சன் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதேபோல் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பிறகு அனைவரும் குணமடைந்தனர். அதேபோல் நடிகர் விஷாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவ்வாறு பல முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோருக்கு கொரோனா

அந்த வரிசையில், தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, தனது தாய், தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தமன்னாவிற்கும், அவரது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தனது பெற்றோர் நலமுடன் இருக்கவும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரவும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமாறு நடிகை தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here