நடிகர் விஜய் இன்று தனது 21வது திருமண நாளை கொண்டாடி வரும் வேலையில் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.

திருமண நாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாக திகழ்ந்து வரும் விஜய், இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதாவை கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அவர் திருமணம் செய்துகொண்டார். லண்டனில் வசித்து வந்த சங்கீதா ‘பூவே உனக்காக’ திரைப்படத்தை பார்த்து, விஜய்யை சந்திக்க சென்னை வந்துள்ளார். முதல் சந்திப்பிலேயே சங்கீதாவை விஜய்க்கு பிடித்துப்போக, இரண்டாவது சந்திப்பில் திருமணத்தை முடிவு செய்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணத்தில், பல சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர். விஜய் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதும், ஒரு ரசிகையை திருமணம் செய்துகொண்டதும் அக்காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் – சங்கீதா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

இன்று திருமண நாள் கொண்டாடி வரும் விஜய் – சங்கீதா தம்பதிக்காக, விஜய்யின் ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். விஜய், சங்கீதா பெயரில் அர்ச்சனைகள் செய்து, அவர்களது 21ம் ஆண்டு திருமண நாளை விமர்சையாக கொண்டாடும் ரசிகர்கள், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தெரிக்கவிட்ட கொண்டிருக்கின்றனர். மேலும் #SangeethaVijay என்ற ஹேஷ் டேக்கில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் – சங்கீதா ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here