எப்போது காதல் போர் அடிக்கிறதோ அப்போது தான் திருமணம் செய்வேன் என்று விக்னேஷ் சிவன் கூறியிருப்பது நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் கிசுகிசு
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வப்போது இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஊரடங்கில் முழுமையான தளர்வு ஏற்பட்டதும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து கோவிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது என்று செய்திகள் பரவியது. எப்போதும்போல் இதுவெறும் செய்தியாக மட்டுமே முடிந்துவிடாமல், திருமணம் கட்டாயம் நடந்தே தீரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
கேள்வி கேட்கும் ரசிகர்கள்
இந்நிலையில், விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் “தனக்கு எப்போது காதல் போர் அடிக்கிறதோ, அப்போது தான் திருமணம் செய்து கொள்வோம்” என்று கூறியுள்ளது நயன்தாரா ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது. பல கிசுகிசுக்களில் சிக்கிய நயன்தாரா, இந்த வருடமாவது திருமணம் செய்துகொள்வார் என்று மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், விக்னேஷ் சிவன் இப்படி கூறியதை பார்த்த பிறகு சரமாரியான கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். “என்ன கிண்டலா இயக்குநரே, காதல் எப்போ போரடிக்கிறது, கல்யாணம் எப்போ பண்ணிக்கிறது”, ஏற்கனவே நயன்தாராவுக்கு வயசு ஆகிட்டே போகுது சீக்கிரமாக கல்யாணம் பண்ணுவீங்களா, அதை விட்டுட்டு காதல் போரடிச்சா தான் கல்யாணம்னு சொல்லிட்டு, இழுத்து கிட்டே இருந்தா எப்படி என்பது போன்ற கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் “என்ன தலைவரே ஸ்ட்ரெய்ட்டா 60ம் கல்யாணம் தானா” என்றும் நக்கல் அடித்துள்ளனர்.