சுஷாந்த் சிங் ராத்புத்தின் தங்கை தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல மர்மங்கள்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
பாலியல் அத்துமீறல்
இந்த நிலையில், சுஷாந்தின் தங்கை மீது ரியா சக்ரபோர்த்தி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ரியாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியாவும், சுஷாந்தும் பழக ஆரம்பித்த சில நாட்களில் அவ்வப்போது ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த சமயத்தில் சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங்கும் அவரது கணவரும் சுஷாந்த் வீட்டில் இருந்துள்ளனர். ஒருமுறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது சுஷாந்தின் தங்கை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் ஆண், பெண் என வித்தியாசமின்றி வரம்பு மீறி நடந்துகொள்ள ஆரம்பித்தார். மேலும் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரியா, மறுநாள் சுஷாந்திடம் இதுபற்றி கூறிவிட்டு கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்றார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.