அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திருமண நாள் பரிசு கொடுத்ததாக ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிரை வைத்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
தொடரும் சர்ச்சை
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து, பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மாறி மாறி சண்டைபோட்டு சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகவே இருந்தார். இவர் அவருக்கு நஷ்டஈடு கொடுப்பாரா? அவருக்கு இவர் நஷ்டஈடு கொடுப்பாரா? என்று முடிவில்லாமல் போய்க்கொண்டு இருந்தது வனிதாவின் பிரச்சனை. இந்த விவகாரத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் சமூக வலைத்தளங்களில் அன்றாட பேச்சு பொருளாகவே இருந்து வந்தனர். இருப்பினும் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்றே சொல்லலாம்.
கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
இதனிடையே, தான் நடத்தி வரும் யூடியூப் சேனல் பக்கம் வனிதா கவனத்தை திருப்பியதால், அவரைப் பற்றிய பேச்சுகளும், கிசுகிசுக்களும் குறைந்தன. ஆனால் மீண்டும் தன்னைப் பற்றி பேசுவதற்கு ஒரு புது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருகிறார் வனிதா. தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு திருமண நாள் பரிசு அளித்திருப்பதாகக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவிற்கான கமெண்ட் செக்ஷனை அவர் முடக்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ந்து போன நெட்டிசன்ஸ், வனிதாவை கேலியும், கின்டலும் செய்து வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் கொடுத்த பரிசு பொருளில் “மேட் இன் சீனா” என்று இருப்பதைப் பார்த்து, இதை உண்மையிலேயே டிரம்ப்த்தான் கொடுத்தாரா? இல்லை இவரே செட்டப் செய்து புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளாரா? என்று பல தரப்பிலும் பேசி வருகின்றனர். வனிதாவின் இந்தப் புதுப்பதிவு மூலம், தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய பேச்சுக்கள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது.