ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருவதன் எதிரொலியாக உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பொருளாதார சரிவு

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இதன் காரணமாக உலக பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக அதலபாதாளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், கொரோனாவின் வருகைக்குப் பிறகு உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் சில இந்தியர்கள் மட்டுமே நிகர மதிப்பு அடிப்படையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரும் சரிவு

கடந்த 7 நாட்களில் ஒரு கட்டத்தில் 2134 ரூபாய் வரை சென்ற ரிலையன்ஸ் பங்கு, படிப்படியாக குறைந்து 2091 ரூபாயாக சரிந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் நிகர சொத்து மதிப்பு 6.04 லட்சம் கோடியாக உயர்ந்ததை தொடர்ந்து முகேஷ் அம்பானி, LVMH தலைவர் பெர்னார்ட் அர்நால்ட்டை ஐந்தாவது இடத்திற்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்தை பிடித்தார். ஏப்ரல் மாதத்துக்கு முன்பு வரை, உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அப்போது 17வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டு மாதத்தில் மட்டும் 28% சரிவைக் கண்டிருந்தது. அதன் மதிப்பு 48,000 கோடி அமெரிக்க டாலராகும். இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரம் என்பதால், முகேஷ் அம்பானியின் பல தொழில்துறை நிறுவனங்கள் முடங்கி, அவரின் நிகர லாபமும் மதிப்பும் சரிவுக்காண காரணாமாக இருந்தன. ஆனால், தற்போது மீண்டும் அதே இரண்டு மாத காலத்தில் உலக பணக்காரர்கள் வரிசையில் 4வது இடத்தில் இருந்து தற்போது 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here