தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகை

‘பொம்மலாட்டம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் காஜல் நடித்து வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் OTTயில் ரிலீசாக உள்ளது. அடுத்து இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.

ரகசிய நிச்சயதார்த்தம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த காஜல், அதில் உண்மை இல்லை என்றும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here