முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர்களின் மனதில் பாசிட்டிவான கருத்துக்களை விதைக்க வேண்டுமென நடிகை வனிதா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரச்சனையில் சோஷியல் மீடியா

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து, பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மாறி மாறி சண்டைபோட்டு சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகவே இருந்தார். இவர் அவருக்கு நஷ்டஈடு கொடுப்பாரா? அவருக்கு இவர் நஷ்டஈடு கொடுப்பாரா என்று முடிவில்லாமல் போய்க்கொண்டு இருந்தது வனிதாவின் பிரச்சனை. இந்த விவகாரத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் சமூக வலைத்தளங்களில் அன்றாட பேச்சு பொருளாகவே இருந்து வந்தனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்த நாள் முதல் நெப்போடிசம் உள்ளவர்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

வனிதா வேண்டுகோள்

இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் மீரா மிதுன். விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே சினிமாவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பன உட்பட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை போட்டு சர்ச்சைகளை கிளப்பி வந்தார். இவ்வாறு எப்பொழுதும் பிரச்சனைகளும், நெகட்டிவிட்டியும், தகாத வார்த்தைகளும் அதிகமாகவே சமூக வலைதளங்களில் காணப்பட்டு வருகின்றன. இதனை மையமாக வைத்து நடிகை வனிதா விஜயகுமார் டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சமூக வலைத்தளத்தை திறந்தாலே ஒரே நெகட்டிவிட்டி #rip #apologise #justicefor போன்ற ஹேஷ்டேக்குகள் மட்டும் தான் நிறைந்து காணப்படுகின்றன. சந்தோஷமான நல்ல விஷயங்களையும் பகிரும் ஹேஷ்டேக்குகள் எதுவுமே பகிரப்படுவது இல்லை. நடிகர்கள் அனைவரும் டுவிட்டர் பக்கங்கள் மூலம் பாசிட்டிவ் கருத்துக்களை ரசிகர்கள் மனதில் விதையுங்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சோஷியல் மீடியாவை புரமோஷன் செய்யும் விதமாக மட்டும் பயன்படுத்தாமல், ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பல பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும் கருத்துக்களை பதிவிட வேண்டும். தற்போது அது மட்டுமே நிறைய இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது என்றும் வனிதா விஜயகுமார் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டை முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோருக்கும் அவர் டேக் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here