தேவையானவை
மீன் – 5 (முள் நீக்கப்பட்டது)
பெரிய வெங்காயம் -1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1 சிட்டிகை
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் இஞ்சி, பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளியை சேர்த்து வறுத்துக்கொண்டே மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதன்தொடர்ச்சியாக தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் அதனுடன் சேர்த்து மீனை வாணலியில் போட்டு மெதுவாக கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து மீன் நன்றாக வெந்த பிறகு இறக்கினால் சுவையான மீன் பொரியல் தயார்.
நன்மைகள்
மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. மனச்சோர்வை குறைக்க உதவும். நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும்.