தேவையானவை
கோழிக்கறி – 400 கிராம் (சதைப்பகுதி மட்டும்)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 5 கிராம் (தோல் நீக்கியது)
மிளகாய் தூள்- 2 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் - 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த் துருவல்- 2 சிட்டிகை
மிளகு – 1 சிட்டிகை
சோம்பு – 2 சிட்டிகை
சீரகம் – 1/2 சிட்டிகை
செய்முறை
இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் இவற்றை நன்றாக அரைத்து மசாலா தன்மையில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு, பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சியை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிம்மில் வைத்து மெதுவாக வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து உப்பு மற்றும் மிளகாய் தூளை அதனுடன் சேர்த்து வதக்கவும். பிறகு கோழிக்கறியை அதனுடன் சேர்த்த பின், அரைத்த மசாலா, 400 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கோழிக்கறி நன்றாக வெந்த பின் இறக்கினால் சுவையான ஜிஞ்சர் சிக்கன் தயார்.
நன்மைகள்
புரோட்டின் சக்தி அதிகமாக உள்ள உணவு. சளி, இருமலுக்கு சிறந்தது. தொண்டைவலி உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.