தேவையானவை
கடலைப்பருப்பு – 400 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 10
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடலை எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் உப்பு சேர்த்து அரைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அவற்றை அரைத்த கடலைப் பருப்புடன் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்ந்த தன்மையில் அதனுள் போட்டு, பொன்னிறிமாக வந்தபிறகு எடுத்தால் அருமையான, சுவையான கடலைப்பருப்பு பக்கோடா தயார்.
நன்மைகள்
தோல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கக்கூடியது. உடலின் தசைகள் வலுப்பெற இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகளவில் பெருக்கக் கூடியது. இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து காப்பாற்றக் கூடியது.