தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பிளஸ் 1 பொதுத்தேர்வை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதினர். கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம், தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் பார்க்கலாம்.

96.04% தேர்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் உள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு தெரிவிக்கப்படும். பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49%  தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1 சதவிகிதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here