தங்கத்தின் விலை தொடர்ந்து 11வது நாளாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை தொட்டுள்ளதால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விண்ணைத்தொட்ட விலை
ஒவ்வொருவரின் வாழ்விலும் தங்கம் நீங்காத அங்கமாகிவிட்டது. குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட எந்தவித நிகழ்ச்சிகளாக இருந்தாலும் நீக்கமற நிறைந்திருக்கிறது தங்கம். ஆனால், இன்றைய நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
உச்சம்தொட்ட தங்கம் விலை
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.5,125க்கும், சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ. 41,200க்கும், கிராம் ரூ.57 உயர்ந்து ரூ.5,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் தங்கம் விலை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.