சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்கள் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு

கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில் சேவையால் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெயர் மாற்றம்

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆலந்தூர் மெட்ரோ என்பதை மாற்றி ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்று பெயரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என பெயர் வைத்ததைப் போல, சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும் என்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோவுக்கு ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here