உலக நாயகன் கமல்ஹாசனையும், முன்னணி நடிகை திரிஷாவையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்று ஒன்று இருந்தால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. ஆனால் ரசிகர்களை திட்டுகிறாரே தவிர பதிவிடுவதை நிறுத்துவில்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கமல் மீது குற்றச்சாட்டு

தற்போது கமல்ஹாசனையும், திரிஷாவையும் கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு திரிஷாவுக்காக கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டை சுட்டிக்காட்டி, ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் அவர் கூறியிருப்பதாவது; நெப்போடிசம் என்பது சாதியிலிருந்து தான் வருகிறது. திரிஷா திரைத்துறைக்கு வந்து தற்போது வரை நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் அவர் உயர்சாதி என்பதுதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியபோது, அதனைக் கண்டுகொள்ளாத நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய சாதி என்பதற்காக திரிஷாவுக்கு மட்டும் குரல் கொடுத்துள்ளார். இவ்வாறு மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

மீண்டும் சர்ச்சை

ஏற்கனவே ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதுன். தற்போது கமல்ஹாசனையும், திரிஷாவையும் சாதியை வைத்து விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here