சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி சென்னையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இடியுடன் கூடிய கனமழை
காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் அசோக் நகர், தியாகராய நகர், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குன்றத்தூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், வளசரவாக்கம், போரூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், பம்மல், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் அடைந்துள்ளனர்.