ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

முழு ஊரடங்கு

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

முதலமைச்சர் ஆலோசனை

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 6ம் கட்ட ஊரடங்கில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்வுகளை வழங்கலாமா? என்பது குறித்தும் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைகளுக்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here