தனக்கு விருதுகள் கொடுப்பதில் அநியாயம் நடந்துள்ளதாக நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பின்புலம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. சினிமாத்துறையில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், சினிமா பின்புலம் இல்லாமல் வெளியில் இருந்து வரும் நடிகர், நடிகைகளின் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. மேலும் விருதுகளைக்கூட வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

தமன்னா குற்றச்சாட்டு

இந்த குற்றச்சாட்டை ஆமோதித்துள்ள நடிகை தமன்னா, விருதுகள் கொடுப்பதில் தனக்குப் பல முறை அநியாயம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நிறைய முறை விருதுகளுக்கு தனது பெயர் பரிந்துரைக்கபட்டதாகவும், ஆனால் விருது மட்டும் வரவே இல்லை எனவும் கூறியுள்ளார். விருதுகள் தராமல் திறமையான நடிகர், நடிகைகளை ஒதுக்க முடியாது என்றும் தமன்னா தெரிவித்தார். ரசிகர்கள் ஆதரவுதான் முக்கியம் என்றும் அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நாள் நிலைத்து இருக்கலாம் எனவும் தனது படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதில் திருப்தியாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here