நடிகை கஸ்தூரி நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவை விளாசித்தள்ளியுள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்பு கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்ற போது லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

புகார், கைது

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்து கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதனிடையே வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் வார்த்தைப் போர் மூண்டது. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை மட்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டு வம்பில் சிக்கினார் வனிதா.

பொறுமையை இழந்துட்டேன்

இதனிடையே, நடிகை கஸ்தூரி நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இது எலிசபெத்தோட பிரச்சனை மட்டுமல்ல. என் புருஷன் மட்டும் இப்படி ஏதாவது செய்திருந்தால் நான் நேராக போய் வெட்டியிருப்பேன். இப்படி டிவி முன்னாடி உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருக்கிறத பார்த்து எலிசெபத் எவ்வளவு கஷ்டப்படுவார். என் புருஷன் பீட்டர் பால் போன்று இல்லை. அவங்க என் கணவரை பற்றி பேசியது திருமணத்தையே கேவலப்படுத்தியது போன்று இருந்தது. வனிதாவுக்கு கம்பானியன்ஷிப் என்பதன் அர்த்தமே தெரியவில்லை. ரொம்ப பொறுமையாக இருந்த நான், தற்போது பொறுமையை இழந்துட்டேன். இந்த வீடியோ எல்லாம் வெளியிடுவது ஏன் என்றால், தான் செய்வது சரி என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார். அதற்காக தான் இப்படி பைத்தியம் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. பீட்டர் பாலுக்கு விவாகரத்தான பிறகு இந்த திருமணம் நடந்திருந்தால் யாருமே கேள்வி கேட்க மாட்டோம். ஆக்ட் ஆஃப் லவ் என்று சொல்கிறார். அடுத்தவர் புருஷனுக்கு கேமரா முன்பு வனிதா கிஸ் கொடுக்கிறார். அவரின் பிள்ளைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள். நான் ஒரு பெண் சிங்கம் என்று நிரூபிக்க பார்க்கிறார். இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here