“பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா தனது பிரசவத்திற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் சூழலில் அதை நினைத்து தற்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ மீனா கதாபாத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா, தற்போது செல்ல மருமகளாக மாறினாள். தொடக்கத்தில் வில்லி போலவே ஹேமாவின் கதாபாத்திரம் இருந்தாலும், இப்போது குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் கதையை காட்டத் தொடங்கிவிட்டனர்.

அச்சத்தில் ஹேமா

ஊரடங்கு முன்னர் கதைப்படி ஹேமா கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர் உண்மையிலேயே கர்ப்பமாக இருப்பதை அறிந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. இப்பவே பயமாய் இருக்கிறதே என்று அவரது பிரசவத்தை நினைத்து இப்பொழுதே பயப்பட ஆரம்பித்து விட்டார் ஹேமா. இன்னொரு பக்கம் குழந்தை பிறக்கப்போகிறது என நினைத்தால், கொஞ்சம் சந்தோஷமாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இதனை அறிந்த ஹேமாவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். உங்கள் நல்ல மனதிற்கு கண்டிப்பாக சுகப்பிரவசம் ஆகும் என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here