பருத்தி சேலை சிம்பிளாக இருந்தாலும் ஒப்பனைகளின் நேர்த்தியால் ரிச்சாக இருப்பது போன்ற தோற்றத்துடன் அழகாக காட்சி தரும் நடிகை சித்ராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போராடி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் தேதி மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்கள், தங்களுக்கு தேவையான வேலைகளை செய்து நேரத்தை பொறுப்பானதாக செலவழித்து வருகின்றனர். சமையல், உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம், யோகா என பொழுதை கழித்து வந்த நிலையில், பெண்கள் சேலையை எப்படி உடுத்துவது என்பதையும் கற்றனர்.

பெண்களின் ஃபேவரேட்

ஆடை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வர். குறிப்பாக பல பெண்களின் ஆசை பாரம்பரியமிக்க சேலையை உடுத்துவது தான். இன்றைய பெண்களின் ஃபேவரேட் பருத்தி சேலை தான். பருத்தி சேலைகள் கட்டுவதற்கு சவுகரியமாகவும், சிம்பிளாகவும் இருந்தாலும் ஒப்பனை செய்துகொண்டால் ரிச்சான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். ஆகையால் தான், டிசைனர் சேலைகளின் இடத்தை, இன்று பருத்தி சேலைகள் பிடித்துள்ளது. மேலும் பெண்களால் அதிகம் அணியப்படும் சேலையாகவும் மாறியுள்ளது.

சேலையில் அசத்தும் சித்ரா

இப்படி பெண்களின் ஃபேவரேட்டான பருத்தி சேலையை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ரா, அந்த தொடர் முழுவதும் உடுத்தி வருகிறார். இந்தத் தொடரில் சித்ரா அணியும் சேலைக்கு ஏற்றவாறு அவரின் வலையல்கள் இருக்கும், சில்க் திரெட் வலையல் தான் அதிகமாக அணிவார். சேலை கலருக்கு ஏற்றவாறு காண்டாஸ்ட் கலரில் பிளவுஸ் அணிகிறார். மேக்கப் பொறுத்தவரையில் ஹோம்லி லுக்கிற்கு ஏற்ப சிம்பிளாகவே தேர்வு செய்கிறார். இப்படி தினமும் ஒரு புடவையில் வந்து அசத்துகிறார் சித்ரா. இல்லத்தரசிகளுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து வரும் சித்ரா, எந்த சேலைக்கு ஏற்ற பிளவுஸ், மேக்கப் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஈசியாக கூறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here