தேவையானவை
நண்டு – 5
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சிகப்பு மிளகாய் (நீளமானது) – 10
தனியாத் தூள் – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிதளவு
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டுகளை சுத்தம் செய்து அதன் ஓடுகளை நீக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், தனியா போன்றவற்றை நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பின் பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி நன்கு காய்ந்தபின் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து மெதுவாக வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலைக்கு வந்தவுடன், நண்டுகளை அதனுள் போடவும். நண்டுகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, பின்னர் இறக்கினால் சூடான, சுவையான செட்டிநாடு நண்டு வறுவல் தயார்.
நன்மைகள்
சளி இருமலுக்கு மிகச்சிறந்த உணவாகும். உடல் சூட்டை அதிகரிக்கக் கூடியது.