தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும், மிகச்சிறந்த வில்லனாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடப்பதில் வல்லவர் விஜய்சேதுபதி. இவரது எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்திருக்கிறார். நாயகனாக அறிமுகமாகும் போதே ‘பீசா’, ‘சூது கவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்கள், இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்திலும் விஜய்சேதுபதி நடித்தார். ஆனால் ‘சூது கவ்வும்’ படம் பேசப்பட்ட அளவிற்கு இப்படம் பேசப்படவில்லை. விஜய் சேதுபதி தற்போது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

தெலுங்கு ரீமேக்கில் விஜய்சேதுபதி

அசோக்செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளிவந்து வெற்றி படமாக மக்கள் மனதில் நின்றதுதான் ‘ஓ மை கடவுளே’. அப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை இயக்குநர் அசோக் மாரிமுத்து இயக்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதனை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என முடிவெடுக்கபட்டுள்ள நிலையில், அதிலும் விஜய் சேதுபதியையே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘உப்பென்னா’ போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும், அப்படங்கள் பெருமளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here