நடிகர் சிம்பு, நடிகை திரிஷாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான செய்திக்கு சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை நாயகன்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக தமிழ் சினிமாவை ஆண்டவர்தான் சிம்பு. நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், நடன கலைஞர் போன்ற பன்முகம் கொண்ட சிம்பு, தனது தந்தை டி. ராஜேந்தர் முலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சிம்பு. இதன்பின் தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதன்பின்னர் பல படங்களில் நடித்து, வெற்றிகளை குவித்தார். கடந்த சில வருடங்களாக சிம்பு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஷூட்டிங் வருவதில்லை என்று பல தயாரிப்பாளர்கள் இவர் மேல் புகார் கொடுத்தனர். கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ படமும் இந்த வருடம்தான் மீண்டும் துவங்கியுள்ளது.

திறமையான நடிகை

ஒரு ஹீரோயின் பல காலமாக பல மொழி சினிமாக்களை கட்டி ஆள்வது திரிஷா ஒருவர் தான். ஜோடியில் அரம்பித்த திரைப்பயணம் பரமபதம் வரை நீண்டு கொண்டே இருக்கிறது. தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார் திரிஷா. சாமியில் புவனாவாகவும், கில்லியில் தனலட்சுமியாகவும் வந்தார். தமிழைப் போல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார் திரிஷா. சர்வம் படத்தில் இவர் நடித்த நடிப்பிற்கு மயங்கிய இளைஞர்கள், சிறகுகள் விரித்து வானத்தில் பறந்தனர். அழகான ராட்சசியாக பேய் படங்களிலும் நடித்துள்ளார் திரிஷா. ஒரு மாஸ் கம்பேக் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது, திரிஷா நடித்த “96” திரைப்படம். ரசிகர்கள் மனதில் இன்னமும் அவர் ஜானுவாக வாழ்ந்து வருகிறார்.

சிம்புக்கு ஜோடியாகும் திரிஷா?

நடிகர் சிம்பு, திரிஷா உடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதில் ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் இருவருக்கும் உள்ள அந்தக் காதல் காட்சி, இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தால் அழகாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த நிலையில், நடிகர் சிம்பு விரைவில் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இதுபற்றி நடிகர் சிம்பு தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் மூழ்கி உள்ளதால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்று வதந்தியை சிலர் பரப்புகின்றனர். இதில் துளியும் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இதற்கு முன் நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோரை காதலித்து பின் பிரேக் ஆப் செய்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here