தேவையானவை
பச்சரிசி அல்லது இட்லி அரிசி – 1 டம்ளர்
தேங்காய் துருவல் – 1 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 சிட்டிகை
செய்முறை
பச்சரிசி அல்லது இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் அரைக்கும் போது முக்கால் பதம் தன்மை வந்தவுடன் 2 ஸ்பூன் மாவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு நங்கு களி போல் கிளறி ஆற வைக்கவும். தேங்காய் துருவலையும் அந்த மாவுடன் சேர்த்து நன்றாக அரைத்து, அதனுடன் களி மாவை சேர்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக மாவில் உப்பு சேர்த்து நன்றாக புளிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு ஆப்பம் ஆக ஊற்றினால், கேரளத்து சிறப்பு உணவு தயார். இந்த ஆப்பத்திற்கு சன்னா மசாலா மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஆப்பத்தின் நன்மைகள்
வயிற்று புண்னை ஆற்றக்கூடியது. குளிர்ச்சியை தரக்கூடியது. செரிமான தன்மையை தூண்டக்கூடியது.