கொரோனாவில் இருந்து தப்பிக்க குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்து சென்ற நடிகை சன்னிலியோன் அங்குள்ள கடற்கரையில் குடும்பத்துடன் ஆட்டம் போட்டு பொழுதை கழுத்து வருகிறார்.

கனவுக்கன்னி

தனது அழகான நடிப்பால் கோடானக்கோடி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சன்னிலியோன். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு வந்த சன்னி லியோன், மும்பையிலேயே செட்டில் ஆனார். படங்களில் நடிக்க வசதியாக தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் 3 குழந்தைகளுடன் மும்பையிலேயே இருந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த போது, அதிலிருந்து தப்பிக்க அமெரிக்கா சென்றார்.

கடற்கரையில் ஆட்டம்

அங்குள்ள பண்ணை வீட்டில் தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் சன்னி லியோன், கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் குழந்தைகளோடு ஆட்டம் போடுகிறார். அதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின் தள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை, இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி “கொரோனா வைரஸ்”க்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உணர்ந்தோம். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எங்கள் பண்ணை வீட்டில் இருக்கிறோம். அமெரிக்காவில் உள்ள பல்வேறு இடங்களை, அரசின் விதிமுறைகள் கடைபிடித்து சுற்றிப் பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். கடற்கரையில் இதைவிட சிறப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்றும் “ஐ லவ் கலிபோர்னியா” எனவும் சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here