கவலைகளில் இருந்து மீள நடிகை இலியானா அட்டகாசமான யோசனை ஒன்றை கூறியுள்ளார். 
யோசனை
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை இலியானா, நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவலைகளில் இருந்து மீள்வதற்கு சில யோசனைகளை இலியானா வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும் போது, நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவேன். பிறகு எல்லாமே மாயமாக மறைந்து விடும். எனவே எல்லோரும் இந்த யுக்தியை கையாண்டு கவலைகளில் இருந்து மீளுங்கள்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
நான் குண்டாகிவிட்டேன் என்று ஒரு முறை விமர்சனங்கள் வந்தன. அப்போதும் இதுமாதிரி தீவிர உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்து பழைய நிலைக்கு மாறினேன். தினமும் புது புது உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தடவை செய்து பாருங்கள் அதன் பலன் எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும் என்று உங்களுக்கே தெரியும்.” இவ்வாறு இலியானா கூறியுள்ளார்.















































