விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என நடிகை அக்ஷரா கெளடா கூறியிருக்கிறார்.

அக்ஷரா கெளவுடா
‘உயர்திரு 420’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கெளவுடா. அதன்பிறகு விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இதையடுத்து அஜித்தின் ஆரம்பம் படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இவர் ஆடிய “ஸ்டைலிஷ் தமிழச்சி” பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைதொடர்ந்து இரும்புக்குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
வருந்துகிறேன்
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘துப்பாக்கி’ படம் பற்றி கூறியிருந்தார். இதுபற்றி அக்ஷரா பேசுகையில், ‘துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வாலின் தோழி கதாபாத்திரம் என்றுதான் என்னை அழைத்தனர். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். காரணம், அந்த கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. ‘துப்பாக்கி’ படத்தில் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான். இருந்தாலும் எனக்கு அதுபற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டாலும் நான் நடிக்க தயார். விஜய்யின் ஸ்டைலையும், நடிப்பையும் கண்டு நான் மிரண்டு போனேன். இவ்வாறு அக்ஷரா கூறியிடுக்கிறார்.















































