தீராத தலைவலியை தீர்க்கும் கரிசலாங்கண்ணி கீரை சோம்பு கசாயம்
தேவையானவை
கரிசலாங்கண்ணிக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
சோம்பு – 1 சிட்டிகை
மிளகு – 10
மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை
கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிளகைத் தூளாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனுடன் கீரை, சோம்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு கொதித்த நீரை 150 மில்லி லிட்டர் அளவாக சுண்ட வைத்து வடிகட்டிய பின் குடிக்க வேண்டும்.
கரிசலாங்கண்ணிக் கீரை நீரின் பயன்கள்
தலைவலியால் அவதிப்படும் போது இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக பருகினால் நல்ல பலன் கிடைக்கும். வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் தீராத தலைவலி தீரும்.