விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பார்த்திபன், இந்தப் பூனையும் கபசுரக் குடிநீர் குடிக்குமா? எனப் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

ஜொலிக்கும் போஸ்டர்

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் நக்கல் நாயகன் பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர். துக்ளக் தர்பார் அரசியல் சார்ந்த படம் என்பதால் அனைவரிடத்திலும் பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தங்கம் போல் ஜொலிக்கும் விஜய்சேதுபதியின் போஸ்டரை பார்த்த அனைவரும் மெர்சலாகி இருக்கின்றனர். மிரர் எஃபெக்ட்டில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு விஜய் சேதுபதி சிரிக்கிறார் மற்றொருவர் முறைக்கிறார். இதனால் இப்படத்தில் இரண்டு விஜய் சேதுபதியா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனை பார்த்த அனைவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா தங்கம் போல ஜொலிக்கிறது என்றால் படம் கண்டிப்பாக வேற லெவலில் தான் இருக்கும் என்று தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

3 நாயகிகள்

முன்னணி நடிகைகளான அதிதி ராவ், மஞ்சிமா மோகன், காயத்ரி போன்ற கதாநாயகிகள் இருப்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் பார்த்திபனும் விஜய்சேதுபதியும் நிற்கும் மாதிரியான புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 7 ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்கும் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் சில புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நக்கலடித்த பார்த்திபன்

எப்பொழுதும் கருத்து சொன்னால் கூட அதில் நக்கலும் நையாண்டியும் கலந்து சொல்வது தான் பார்த்திபனின் ஸ்டைல். அந்த வகையில், துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன் இருக்கும் புகைப்படத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்த்திபன் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “நானும் ரவுடிதான் நீயும் ரவுடிதான் இன்னைக்கு உன் துக்ளக் தர்பார் எவ்வளவு பெரிய லெவல்ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு, இந்த பூனையும் கபசுரக் குடிநீர் குடிக்குமா என்கிற ரேஞ்சுக்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் மாஸ்டர் பிளான் தான் என்ன ?” என்று நக்கலாக விஜய் சேதுபதியை பார்த்து கேட்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here