விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் “துக்ளக் தர்பார்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மக்கள் செல்வன்

விஜய் சேதுபதியின் படம் என்றாலே அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய படமாகத் தான் இருக்கும். அவரது இயல்பான நடிப்பும், எதார்த்தமான சிரிப்பும் அனைவரையும் கவரும். அந்த வகையில் மக்கள் மனதை கவர்ந்த ‘மக்கள் செல்வன்’ ஆகவே அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அதிதி ராவ், காயத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் சார்ந்த படம் தான் துக்ளக் தர்பார்.

“துக்ளக் தர்பார்”

அரசியல் சார்ந்த படம் என்றாலே மக்களிடையே எப்பொழுதும் வரவேற்பு இருக்கும். அதில் கூறும் புதிய கருத்துக்களும், புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதும் அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அரசியல் சார்ந்த படங்கள் இருக்கின்றன. அமைதிப்படை முதல் முதல்வன் வரை எல்லோரும் வியந்து தான் பார்த்தார்கள். அந்த வரிசையில் தற்போது வெளியாக காத்து இருக்கும் படம்தான் துக்ளக் தர்பார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மிரர் எஃபெக்ட் உடன், இரு கெட்டப்பில் நடிகர் விஜய்சேதுபதி மட்டுமே போஸ்டர் முழுவதும் தங்கம் போல ஜொலித்து நிற்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே தங்கம் போல மின்னுகிறதே, படம் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த காயத்ரி இப்படத்திலும் நடித்துள்ளார். அவருடன் அதிதி ராவ், மஞ்சிமா மோகன் போன்ற ஹீரோயின்களும் நடித்துள்ளனர். மூன்று முன்னணி நடிகைகள் இருப்பதால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்ந்திருக்கிறது.

நக்கலுக்கு குறைவில்லை

பார்த்திபன் என்றாலே நக்கலும், நையாண்டியும் தான். அவர் இருக்கும் இடத்தில் அதற்கு குறைவே இருக்காது. கவுண்ட்டர் டயலாக்கை பதிலுக்கு பதில் கொடுத்து அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார் பார்த்திபன். நானும் ரவுடிதான் படத்தில் வில்லனாக நடித்த பார்த்திபன் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து உள்ளார். அரசியல் சார்ந்த படம் என்பதால் இவரது கவுண்ட்டர் டயலாக் அதிகமாக இருக்குமே என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நடிகர் பார்த்திபனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறி பதிவிட்டுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து #TughlaqDurbarFirstLook #VijaySethupathi #MakkalSelvan என்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here