தேவையானவை
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மட்டன் எலும்பு – 1/2 கிலோ
மல்லித்தூள் – 4 சிட்டிகை
தேங்காய் – 1/4 பங்கு
மிளகு – 1 சிட்டிகை
சீரகம் -1 சிட்டிகை
கசகசா – 3/4 சிட்டிகை
ரீபைண்டு ஆயில் அல்லது கடலை எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 4
செய்முறை
குக்கரில் எண்ணெய்யை ஊற்றி சூடாகிய பின், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துவிட வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை ஒரு நிமிட அளவில் வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். அதன்தொடர்ச்சியாக மட்டன் எலும்பை குக்கரில் சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பை சேர்த்து மெதுவாக கிளறி விடவும். அதன்பின் குக்கரை மூடிவிட்டு சிம்மில் வைத்து 5 முதல் 6 விசில் வந்தவுடன் இறக்கினால் சத்தான சுவையான மட்டன் எலும்பு குழம்பு தயார்.
மட்டன் எலும்பின் நன்மைகள்
மட்டனின் எலும்பு இதயத்திற்கு வலு சேர்க்கக்கூடியது. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக உண்ணலாம். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. பெண்களின் மாதவிடாய் காலகட்டத்தின் அருமருந்தாகும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அளவாக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.