புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.