உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டுமென இளைஞர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சீன செயலிகளுக்கு தடை

எல்லைப்பகுதியில் இந்திய – சீன ராவணு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருநாடுகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக தடை விதித்தது.

இளைஞர்களுக்கு அழைப்பு

இந்த நிலையில், உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “உங்களிடம் இதுபோன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பார்வை மற்றும் நிபுணத்துவம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது எனக் குறுப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை இந்திய இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நல்ல வாய்ப்பு

இன்று, ஒட்டுமொத்த தேசமும் ஒரு சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும், அவர்களின் கடின உழைப்புக்கு வேகத்தையும், நமது சந்தையை திருப்திப்படுத்தக்கூடிய பயன்பாடுகளை உருவாக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று பிரதமர் மோடி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here