விழா மேடை ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நடிகர் சல்மான் கான் உதாசீனப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எங்கேயும் அரசியல்

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு அனைவரும் பேசத் தொடங்கிய முக்கியமான விஷயம் நெபோடிசம். சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகமாக கொடுப்பதாகவும், சினிமா பின்புலம் இல்லாதவர்களை திறமை இருந்தாலும் மதிப்பதில்லை என்பதும் அனைவரின் கருத்தாக இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீப காலமாகவே பழைய வீடியோக்களும், புகைப்படங்களும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சுஷாந்தின் பழைய வீடியோக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் இந்த வேலையில், முன்னணி நடிகர்கள் பலபேர் தனது திமிரான பேச்சை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் அனைவரும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

அசிங்கப்படும் பாலிவுட்

பல மேடை நிகழ்ச்சிகளில் சுஷாந்த் சிங்கை உதாசீனப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மன உளைச்சல் தாங்காமல், அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பல மேடை நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஷாருக்கானும், சைப்அலி கானும் மேடை நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ் கற்கப் போகிறோம் என்று சொல்லி மாதவனை வம்பிழுத்தனர். ஆனால் மாதவன் “போடா கிறுக்கு கதாநாயகன்களா” என்று கூறி மற்றவர்கள் சிரிக்கும் மாதிரி மூக்கை உடைத்தார். அந்தவகையில் இப்பொழுது டிரெண்ட்டாக இருக்கக்கூடிய வீடியோ ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சல்மான்கானின் பழைய வீடியோவாகும்.

நோஸ்கட் வாங்கிய சல்மான்

ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கென தனித்திறமைகள் இருந்தாலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசை அனைத்தையும் தாண்டி ஒரு உச்சத்தை தொட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு விருது வழங்கும் விழாவில் சல்மான்கானும், ஏ.ஆர். ரஹ்மானும் மேடையில் நின்று கொண்டிருக்கும்போது, சல்மான்கான் இவரது இசை சுமார்தான் என்ற ஒரு வார்த்தையை கூறியிருக்கிறார். அப்பொழுது ஏ.ஆர். ரஹ்மான் சிரித்துக்கொண்டே தனது கைகளை கோட் பாக்கெட்டில் வைத்து இருக்கிறார். சல்மான்கான் கைகுலுக்க கையை கொடுத்தாலும், அதை கண்டும் காணாதது மாதிரி கைகளை பாக்கெட் உள்ளேயே வைத்திருந்தார் ரஹ்மான். உடனே சல்மான்கான் அவரின் கையை மெதுவாக எடுத்து வெளியே விடுகிறார். இந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரஹ்மானிடம் திமிரை எப்படி காட்டி இருக்கிறார் சல்மான்கான் என்று பலரும் கூறி வருகின்றனர். மிகப்பெரிய இசை அமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானிடம் இவர் இப்படி திமிராக நடந்து கொண்டிருந்தால், சுஷாந்தின் முன்னேற்றத்தை கண்டிப்பாக தடுத்து இருப்பார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நெட்டிசன்ஸ் கிண்டல்

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சல்மான் கான் உதாசீனப்படுத்தி பேசியது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது. இது ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்பொழுதும் அமைதியாகவே காணப்படும் ஏ.ஆர். ரஹ்மான், சல்மான் கானுக்கு கை கொடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்ததை விட வேறென்ன அசிங்கம் இருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். எப்போதும் மூக்கை உடைத்து கொல்வதே பாலிவுட் நடிகர்களின் வேலை என்றும், “ரொட்டி சாப்படற உங்களுக்கே அவ்ளோ இருந்தா… புளிசாதம் சாப்பிடற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்” என்று பல வகையான கமெண்ட்ஸ்களும் வந்துகொண்டே இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here