எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் விஜய்யை வைத்து இனி படம் எடுக்கமாட்டேன் என பிரபல இயக்குநர் கூறியுள்ள சம்பவம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடுப்பான இயக்குநர்
தற்போதுள்ள நடிகர், நடிகைகள் தளபதி விஜய்யை பற்றி எவ்வளவுதான் புகழ்ந்து பேசினாலும், சில கசப்பான சம்பவங்களில் விஜய் ஈடுபட்டுள்ளார் என்பது நெப்போலியன் விஷயத்தில் தெரியவந்துள்ளது. நெப்போலியனை தொடர்ந்து இயக்குநர் ஹரியும் அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். ஆக்சன் மசாலா ஸ்பெஷலிஸ்ட்டான ஹரி, விஜய்யை வைத்து படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கதை சொல்லச் சென்ற ஹரியை விஜய் கண்டுகொள்ளவே இல்லையாம். முதலில் வேல் பட கதையை விஜய் நிராகரித்து விட்டாராம். பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நம்பி சிங்கம் பட கதையை கூறச்சென்றுள்ளார் ஹரி. அப்போதும் முழுக் கதையை கேட்டுவிட்டு நிராகரித்துள்ளார் விஜய். இதனால் கடுப்பான இயக்குநர் ஹரி, இனி விஜய்க்கு கதை சொல்லப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என முடிவு செய்துவிட்டதாக தனது சினிமா வட்டாரத்தில் கூறியிருக்கிறாராம்.
ஏமார்ந்த ரசிகர்கள்
ஹரியின் இந்த முடிவு மூலம் விஜய் ரசிகர்களின் கனவு கனவாகவே போய்விட்டது. விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்கிய ஹரி, அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்துள்ளார். விஜய் இப்போது ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாளுக்குநாள் விஜய்யின் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை படத்திற்குப் படம் அதிகரித்துக்கொண்டே செல்கிறார் விஜய்.
‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஆண்டிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தொகுப்பாளினி ரம்யா, ஆஹா கல்யாணம், பிகில் வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க ‘ஆடை’, ‘மேயாத மான்’ படங்களை இயக்கிய ரத்னகுமார் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். சமீபத்தில் ஒளிப்பதிவாளர் ரத்னகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில்; மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யை ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவில் சாதனை படைக்கும் படமாக மாஸ்டர் இருக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.















































