பிரபல நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மக்களுக்கு பிடித்த ஒன்று

தற்போது சாதாரண படங்களை விட பயோபிக் என கூறப்படும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் பெருமளவில் மக்களைக் கவர்கிறது. அதனால் பலரும் தற்போது பயோபிக் படங்களையே பெருமளவில் இயக்கி வருகின்றனர். ஒருவரைப் பற்றி முழுமையாக முக்கியமான விஷயங்களையும், யதார்த்தங்களையும், அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள். பயோபிக் படங்கள் இப்போது மட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பு இருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும் அந்த வகையில் பாரதியார் முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரை பல முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுத்து வருகின்றனர்.

தலைவர்களின் பயோபிக்

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘பாரதி’ என்ற திரைப்படம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஞான ராஜசேகரன் இயக்கிய இப்படத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வேடத்தில் மிக தத்ரூபமாக நடித்து இருப்பார் ஷாயாஜி ஷிண்டே. கண்ணம்மாவாக தேவயானியும் எதார்த்தமாக நடித்திருந்தார். அதைப்போல் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறும் பயோபிக்காக எடுக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன், காமராஜராக நடித்தவர் ரிச்சர்ட் மதுரன். ஜபால் இயக்கிய டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் வெளிவந்தது .ஓமங் குமார் இயக்கிய இப்படத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் மண் பைராகி என்ற பெயரில் ஹிந்தியிலும், கர்மயோகி என்ற பெயரில் தமிழிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.

திரைப்பிரபலங்களின் பயோபிக்

கிரிக்கெட் வீரரான எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்ததில் சுஷாந்த் சிங் ராஜ்புட் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பார். இப்படம் பெருமளவில் பேசப்பட்டது. பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்திசுரேஷ் நடித்தார். இது மிகப்பெரிய வெற்றியை கண்டதுடன், கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டும் அதிகமாகிவிட்டது. ஹிந்தியில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சு என்ற பெயரில் பயோபிக்காக வெளியிட்டனர். கவர்ச்சிக்கு பெயர் போன சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் dirty picture என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. வித்யா பாலன் நடித்த அப்படமும் பெருமளவு வரவேற்பு பெற்றது. தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரீஸ் ஆகவும் எடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு

இப்படி பல்வேறு விதமான வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை மலையாள இயக்குனரான சாரயு மோகன் என்பவர் இயக்கியுள்ளார். ஹிந்தியில் உருவாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரிச்சா சடா நடித்துள்ளார். ஷகிலாவின் வாழ்க்கையை ஒரு குறும்படமாக எடுக்கவும் பலர் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைக்கேட்ட ஷகிலாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். தமிழில் விஜய், ஜெயம் ரவி, ஆர்யா, அருண்விஜய் ஆகியோர் நடித்த படங்களில் முக்கிய கதபாத்திரத்தில் ஷகிலா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here