பிரபல டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மோதல்

எல்லைப்பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சீன பொருட்களையும் இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர்.

அதிரடி தடை

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா – சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

விளக்கம்

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here