நீரில் மூழ்கி நடனமாடும் உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசன், அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

நிரூபிக்கும் ஸ்ருதி

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தந்தையைப் போல நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். பாடகியாக புகழ்பெற்ற அளவிற்கு நடிப்பு இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் பல மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கதவை தட்டிக்கொண்டு தான் இருக்கிறது. கமல்ஹாசனின் மகள் என்று தெரிந்தால் பள்ளி பருவத்தில் சக மாணவர்களுடன் பழகுவதற்கு சற்று கடினமாக இருக்கும் என்று நினைத்த ஸ்ருதி, பூஜா ராமச்சந்திரன் என்ற பெயரையே பயன்படுத்தி பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். சைக்காலஜி படித்த இவர், இசை மீது கொண்ட ஆர்வத்தால் கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்து முறைப்படி இசையைக் கற்றார். அனைத்து நடிகைகளை போலவும் ஸ்ருதிக்கும் ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதிலும் ஷூ, சாண்டல்ஸ் போன்றவை வாங்குவதில் அவருக்கு மிகுந்த ஆர்வம். அதனால் புதுப்புது வகையான ஷுகளை தேடித்தேடி வாங்கி போட்டுக் கொண்டு அழகு பார்ப்பாராம். பலவகையான மேக்கப் சாதனங்களில் அதிகம் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன், அதையும் வாங்கி தனது வீட்டில் குவித்து வைத்திருக்கிறாராம்.

டைம் பாஸ்

ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் வசூல் ரீதியாக இழப்பை ஏற்படுத்தினாலும், படத்தின் கதை சினிமா வட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டது. தமிழில் அஜித், விஜய், விஷால், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். எப்போதும் வீட்டில் இசைக்கருவிகளை வைத்து விதவிதமாக பாடல்களைப் பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது ஸ்ருதியின் வழக்கம். ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தன் ரசிகர்களுக்கு அவ்வப்போது பல பாடல்களை விருந்தளிப்பது ஒரு கடமையாகவே செய்து வருகிறார் ஸ்ருதி. அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் எப்போதும் இவரை இசைக்கருவிகளுடன் தான் பார்க்க முடிகிறது. அதைவிட்டால் பிடித்த உணவுகளை சமைத்து உண்பதும், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டும் வருகிறார். வீட்டில் இருக்கும் சமயத்தில் விதவிதமான போட்டோ ஷூட்ஸ் எடுத்து, அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

தண்ணீரில் போட்டோ ஷூட்

கமல்ஹாசன் நடித்து இளையராஜா இசையமைத்த நாயகன் படத்தில் வரும் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை அவரது பாணியில் பாடி அசத்தினார் ஸ்ருதி. அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. எப்போதும் ஸ்ருதியின் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துக் கொண்டே இருப்பார். மீண்டும் ஒருமுறை இவர் கமல்ஹாசனின் மகள் என்பதை நிரூபிக்கும் வகையில் விதவிதமாக போட்டோ ஷூட் எடுப்பதையே செய்து வந்த நிலையில், தற்போது நீருக்கடியில் பலவகையான போட்டோ ஷூட் நடித்தியுள்ளார். அதிலும் நடனமாடுவது போன்ற புகைப்படம் பெருமளவில் வைரலாகி வருகிறது. நீரில் கண்களை திறந்தபடி மேக்கப்புடன் மூழ்கியிருக்கும் ஸ்ருதியை பார்த்து ரசிக்கின்ற அவரது ரசிகர்கள், லைக்ஸ்களை அள்ளிவிடுகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் இவர் அரைகுறை ஆடைகளில் வலம் வருகிறார் என்று பலர் கமெண்ட் செய்த போதிலும், அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பிஸியாகவே இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

மகளின் ஆசை

தனது வாழ்க்கையில் தன் தந்தையை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது தான் ஸ்ருதிஹாசனின் மிகப்பெரிய ஆசையாம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் அன்பு மகள். அது எப்போது நடக்கும் என்று அவரது ரசிகர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஸ்ருதிஹாசன் தற்போது ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் ‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here