தேவையானவை
மட்டன் நல்லி எலும்பு – 1/2 கிலோ
தேங்காய் – 1 பாதி
தனியா – 2 கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 10
சீரகம் – 1 சிட்டிகை
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
தக்காளி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்டு ஆயில் அல்லது கடலை எண்ணெய்) – 50 கிராம்
பட்டை- 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
செய்முறை
ஒரு கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தேங்காய் போன்றவைகளை சிவந்த தன்மை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். அதனுடன் நல்லி எலும்பையும் சேர்த்து நன்கு கிளரி விடவும். பின்னர் அரைத்து வைத்திருந்த மசாலாவை அதில் கலந்து நன்கு வதக்கி அதன்பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கினால், சுவையான மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய நல்லி எலும்பு குழம்பு ரெடி.
நல்லி எலும்பின் பயன்கள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மினரல்கள் கிடைக்கின்றன. குடல் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மையுடையது. மூட்டு வலிக்கு நன்கு பயனளிக்கக் கூடியது. எடைக்குறைப்புக்கும் நன்கு பயன்படுகிறது. தசைகளை வலுவாக்குகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது.