பிரபல காமெடி நடிகை வித்யுலேகா கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து தீவிர கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார்.

நகைச்சுவை நாயகி

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகியாக அறிமுகமானவர் வித்யுலேகா. அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்ததை தொடர்ந்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.

கவர்ச்சி

இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் வித்யுலேகா வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட அவர், கடின உடற்பயிற்சிக்குப் பின் ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைத்தது குறித்து ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “நான் அதிக எடையுடன் இருந்தபோது எல்லோரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி “நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?”

எதுவும் எளிதல்ல

பின்னோக்கிப் பார்த்தால், இது நானா? என் வாழ்நாள் முழுவதும் நான் பருமனாக இருப்பேன் என்ற உண்மையை புரிந்துகொண்டேன்? இன்று நான் உண்மையில் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன், என் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றினேன். நீங்களும் மனது வைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை உணர்வீர்கள். ஆனால், ஒழுக்கமாக இருக்க வேண்டும். வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்து சீரான உணவைப் பின்பற்ற வேண்டும். தூய்மையான கடின உழைப்பு தேவை. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல, ஆனால் முடிவைப் பார்க்கும்போது அது நம்மை வியக்க வைக்கும். இப்போது நான் 68.2 கிலோ எடை இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here