COVID19 காரணமாக ஜப்பானில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், டென்னிஸ் விம்பில்டன் போட்டிகள், ஃபார்முலா 1 கார் ரேஸ் போட்டிகள், கால்பந்து லீக் போட்டிகள், இந்தியாவில் நடக்கவிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விளையாட்டைத் தாண்டி அது தொடர்பான வர்த்தகம், ஒளிபரப்பு உரிமை எல்லாம் தடைபட்டுள்ள நிலையில் சில நாடுகள் சில விளையாட்டுப் போட்டிகளை முன்பு திட்டமிட்டபடியே நடத்த நினைக்கின்றன. அதற்கு முன் வீரர்களுக்கு தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்ததில் பல பகீர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கிரிக்கெட்

முதன் முதலின் தனக்கு கொரோனா தொற்று இருக்கிறது. நான் சிகிச்சைக்கு செல்லப்போகிறேன் என்று பதிவிட்டவர் முன்னால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷஹித் அஃப்ரீதி. ஜூலை மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று போட்டிகளில் பங்கேற்கவிருந்த பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மூவருக்கு முதலில் தொற்று இருப்பதாகத் தகவல் கசிந்தது. ஹைதர் அலி,ஹரிஸ் ரௌஃப் மற்றும் ஷதாப் கான். அதன்பின் முழு அணியையும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மேலும் ஏழு வீரர்களுக்கும்,அணியோடு பயணிக்கும் 2 ஊழியர்களுக்கும் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இது குறித்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 11பேர் உட்பட இங்கிலாந்து செல்லவிருந்த 35 பேரில் யாருக்குமே நோய்க்கான அறிகுறிகளே இல்லை. இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. வீரர்களை அவரவர் வீட்டிலேயே குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுத்திக்கொள்ள சொல்லியுள்ளோம். திட்டமிட்டபடி ஜீன் 28ஆம் தேதி தொற்று இல்லாத வீரர்கள் முதலில் இங்கிலாந்து செல்வார்கள். மற்றவர்கள் நிலைமையை அவ்வப்போது கண்காணித்து அவர்களை அனுப்புவதா அல்லது மாற்று ஏற்பாடு செய்வதா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானையடுத்து அதிக தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள்.

பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த பல நாட்டு தடகள வீரர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அடுத்த வருடம் ஜூலை-ஆகஸ்டில் ஒலிம்பிக்ஸை நடத்த திட்டமிட்டு உள்ளது.

17 கிராண்ட்ஸ்லேம்களை வென்று நீண்ட நாள் சேம்பியனான ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக வலம் வரும் செர்பிய நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  நிவாரண நிதி திரட்டும் பொருட்டு விளையாடிய இடத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சம்மதித்த அவர் தடுப்பூசிகள் எதையும் ஏற்கமாட்டேன் என்று திட்டவட்டமாகக்கூறியுள்ளார்.

குழு விளையாட்டாக இருந்தாலும் தனி நபர் விளையாட்டாக இருந்தாலும் சரி. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதற்கு விளையாட்டு வீரர்கள் விதிவிலக்கல்ல என்பது கொரோனா கற்றுத் தந்த பாடம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here