மும்பையச் சேர்ந்த அபிஜித் மிஷ்ரா கூகில் பே(GPay) செயலியின் மீது பொது நல வழக்கு தொடுத்துள்ளார். அவரது குற்றச்சாற்றின்படி அமெரிக்க நிறுவனமான கூகுளின் GPay அல்லது TeZ  (NPCI- National Payment Corporation of India)யின்  அங்கீகரிக்கப்பட்ட  கட்டண செயலிகள் பட்டியலில் இல்லை. அதனால்ஆர்பிஐ(RBI) இன் பணப் பரிவர்த்தனை மசோதாக்களுக்கும்(Payment and Settlement Act 2007)இது  உட்படாததால் பயனர்களின் வங்கி,மற்றும் தனி நபர் விவரம் கையாடப்பட வாய்ப்பு உள்ளது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்பிஐ தரப்பு விளக்கங்களைக் கேட்ட பிறகு வழக்கு அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RBI விளக்கம்

கூகுள் பே செயலி மூன்றாம் தரப்பு செயலி(Third Party Application Provider) என்பதால் இது NPCI பட்டியலில் இல்லை. அதனால் பணப் பரிவர்த்தனை மசோதாவை இது எந்தவிதத்திலும் மீறவில்லை என்று தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி பிரதிக் ஜலன் முன்னிலையில் ஆர்பிஐ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

எளிமையான விளக்கம்

ரகுராம் ராஜன் ஆர்பிஐயின் கவர்னராக இருந்தபொழுது 21 வங்கிகளின் செயலிகளை Unified Payment Interface(UPI) என்ற ஒற்றைச் சாளரப் பணப் பரிவர்த்தனைக்குத் தயார் செய்தனர். இதன் மூலம் இந்த 21 வங்கிகளின் செயலிகளை உங்களது செல்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அந்த செல்பேசி எண்ணுக்கு வரும் OTPயைப் பதிவிட்டு வங்கிக்கு செல்லாமல், கம்ப்யூட்டரையோ, பிராட்பேண்டையோ நாடாமல் மொபைல் இண்டர்நெட் மூலமாகவே பணம் வாங்கவும், அனுப்பவும் செய்யலாம்.

இந்த UPI IDகளை மட்டும் இரண்டு விதமாகப் பயன் படுத்தலாம்:

  1. PayTM, PhonPe, Amazon Pay போன்ற Walletகளில் பணத்தைப் pre-paid முறையில் வங்கிக்கணக்கிலிருந்து தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரு கடன் அட்டைக்கு மாற்று. அவ்வளவுதான்.அதனால் இவைகளைப் பயன்படுத்த 2 ஆண்டிற்குள் பயனர் KYC என்று சொல்லப்படும் சான்றுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. Swiggy, Zomato போன்ற TPAPக்கள் மூலம் பணத்தை எடுத்து வைக்காமல் நேராக வங்கிக்கணக்கிலிருந்தே எடுக்கவும், கொடுக்கவும் செய்யலாம். இதற்கு KYC  தேவை இல்லை.

கூகுள் பே வேலட் வகையைச் சேராது

கூகுள் பே முதல் ரக வேலட் வகையறாவாக இருந்தால் வழக்கு போட்டது சரி. அது ஆர்பிஐயின் சட்டங்களுக்கு உட்பட வேண்டும். ஆனால் அது இரண்டாம் ரகம் என்பதால் அதில் சட்டச் சிக்கல் எதுவும் இல்லை. Scratch Cardகள் மூலமாக வரும் பணமும் நேராக வங்கிக்கணக்கிற்குத்தான் செல்கிறது. தனியாக எங்கும் சேமிக்கவில்லை.UPI ID ஐ சரியாகப் பதிவிட்டு OTPயும் சரியாக இருந்தால்தான் பரிவர்த்தனை நிறைவேறும் என்பதால் இதில் பெரிய ஆபத்தும் இல்லை. ஆனால் கடன் அட்டை தொலைந்துபோனால் உடனே வங்கிக்குத் தகவல் தெரிவிப்பதைப்போல், உங்கள் செல்போன் தொலைந்துபோனாலோ, வேறு யாராவது பயன்படுத்தினாலோ மட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here