1929ல் தொடங்கி ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் ஆஸ்கார் விருதுகள் ஒத்திவைக்கப்படுவது இதுவே நான்காம் முறை.உபயம் கொரோனா. பிப்ரவரி 28 நடக்கவிருந்த விழா ஏப்ரல் 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகள் மார்ச் 15, 2021 அன்று வெளியிடப்படும்.வழக்கம் போன்ற விழாவாக இருக்குமா அல்லது மெய்நிகர் விழாவாக மட்டும் நடக்குமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

ஆஸ்கார் என்ற பெயர் எப்படி வந்தது

1930களில் அகாடமியின் முதல் பெண் தலைவரான பெட்டி டேவிஸ் அக்காதான் அதிகப்படியாக 10 முறை அந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2 முறை அவர் வென்றுமிருக்கிறார். அவர்தான் முதல் முதலில் தன் முதல்க் கணவரின் ஞாபகார்த்தமாக( Harmon Oscar Nelson) அகாடமி விருதை அக்கா புருஷன் விருது அதாவது ’ஆஸ்கர் விருது’ என்று அவருக்கே அதை டெடிக்கேட் செய்தவர் என்கிறது ஒரு குறிப்பு. இல்லை இல்லை இந்த வெங்கலச் சிலையின் உருவம் அச்சு அசல் என் மாமா ஆஸ்கரைப் பாக்குறமாதிரியே இருக்கு”ன்னு அகாதமியின் முதல் நூலகரான மார்கரெட் கூறியது பெட்டி அக்கா சொன்னதுக்கு முன்னாடியே பதிவாகியிருக்குன்னு முரண்டு பிடித்தது அகாடமி.1934ல் நடந்த விழாவில் வால்ட் டிஸ்னிதான் முதல் முறையாக ”ஆஸ்கார் விருது அளித்த அகாடமிக்கு நன்றி” என்று தன் ஏற்புறையின்போது குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஆஸ்கார் பிரவேசம்

” இதயெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா வெத நான் போட்டது” என்று தமிழ் படங்களுக்கான ஆஸ்கார் கனவுப்பட்டியலிலும் முதலில் நிற்கிறார் சிவாஜி. பின் தொடர்கிறார் கமல். சிவாஜி கனேசனின் ‘தெய்வ மகன்’ தொடங்கி கமலின் ’ஹே ராம்’ வரையில் 9 தமிழ் படங்கள் விசாரணைக்கு முன் ஆஸ்கார் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.பிற இந்தியமொழிப் படங்களையும் சேர்த்து இதுவரை 63 படங்கள் போட்டிக்கு அனுப்பப் பட்டிருந்தாலும் ’மதர் இந்தியா’,’சலாம் பாம்பே’,’லகான்’ ஆகிய மூன்று படங்கள்தான் திரையிடப்படும் கட்டத்தை எட்டின. சென்ற ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் சோயா அக்தர் இயக்கிய ’கல்லி பாய்’யை சுற்றிய சர்ச்சை சிஷாந்தின் மர்மமான மரணத்திற்குப் பிறகு  நடிகை கங்கனா எழுப்பிய கேள்விகளால் பெரிதாக்கிக்கொண்டே போகின்றன.

ஆஸ்கார் வெற்றி

சென்ற வருடம் ஆஸ்கார் விருதை ’போங் ஜூன் ஹோ’ இயக்கிய ’பேரஸைட்’ படம் வென்றது. இந்த வருடம் கிரிஸ்டோஃபர் நோலான் இயக்கிய’டெனெட்’ பட்த்தில் டைம் இன்வர்ஸ் எனும் புதிய  நுட்பத்தைக்கொண்டு மனிதர்கள் கடந்த காலத்திற்கும், வருங்காலத்திற்கும் அனாயாஸமாகத் தாவுவதுபோன்ற காட்சிகள் உள்ளன. அதில் மனிதர்கள் மாஸ்க் அணிந்துகொண்டே உலாவுவது போன்ற காட்சிகளைப் பார்த்து கொரோனா தொற்றை முன்கூட்டியே கணித்துவிட்டார் நோலன் என்று பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

தேசிய விருது

1982ல்தான் முதல் முறையாக அட்டன்பரௌ இயக்கிய காந்தி திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையாவிற்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது. அதற்கும் பத்து வருடம் கழித்துத்தான் இயக்குநர்  சத்யஜித் ரேவின் வாழ்நாள் சாதனையை அங்கீகரித்து கௌரவ ஆஸ்கர் வழங்கப்பட்டது. பின்பு ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர்.ரஹ்மான், குல்சார் எல்லாம் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்திற்காக ஆஸ்கார் வாங்கிய கதை நமக்கெல்லாம் தெரியும்தானே.அமெரிக்காவின் அகெடமி விருதுகளும், இங்கிலாந்தின்பாஃப்தாஸீம் ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் படத்தையோ அல்லது பிராந்திய எல்லைகளை மீறி சர்வதேச அளவிலான கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கதைக்களமாகக் கொண்ட படங்களைத்தான் தேர்வு செய்யும். இதுபோன்று ஒவ்வொரு சர்வதேச திரைப்பட விழாவுக்கும் ஒவ்வொரு நோக்கு இருக்கிறது. அதனால் கங்கனா ரனாவத் சொன்னதைப்போல நமது படைப்பாளிகள் தேசிய விருதைத் தவிர்த்து எதையும் பெரிதாக சட்டை செய்ய வேண்டியதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here