இதற்குமுன் அமெரிக்க அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஃப்ரான்ஸ் கார்டோவாவின் பதவிக் காலம் மார்ச் மாதத்தோடு முடிவுக்குவந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 16வது தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் கொரோனா காலத்தில் அறிவியல் கண்ணோட்டத்திலிருந்தும், அரசியல் நோக்குடனும் ஒரு முடிவை எட்டியுள்ளது. ரிப்பப்ளிகன் கட்சி பெரும்பான்மை வகிக்கும் இந்த 113வது காங்கிரஸ் எதிர்க்கட்சியான டெமோக்ராட்களுடனான கருத்து வேறுபாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரே மனதாக ஒரு இந்தியரை, அதுவும் ஒரு தமிழரைத் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சேதுராமன் பஞ்சநாதன்?
1981ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். 1984ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் இளநிலை பட்டமும், 1986 ல் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உயர்நிலை பட்டமும் பெற்றுள்ளார். ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் (கனடா) முனைவர் பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு முதல், அரிசோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2020 சூன் 19 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக இவரை அரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் நியமித்தார் . ஜூலை 6, 2020 அன்று பதவி ஏற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏன் இது பெருமைக்குரிய விஷயம்?
சைனாவுக்கு எதிரான ஒரு நெருக்கடி நிலையை அமெரிக்கா சந்தித்துவரும் இந்த சூழலில் ஓர் இந்தியர் அறிவியல் கழகத்தின் தலைவராக இருப்பதுதான் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வேலைகள் சுமூகமாக நடக்கும் என்பது அமெரிக்கர்களைன் அசைக்கமுடியாத நம்பிக்கை.சுப்ரா சுரேசையடுத்து இரண்டாவதாக இந்தப் பதவியை ஏற்கும் ஆசியரும் ஒரு தமிழர் என்பது நமக்குப் பெருமிதம்தானே?
டாக்டர்.சேதுராமனின் அறிவிப்பு
அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த மருத்துவம் அல்லாத துறைகளின் கண்டுபிடிப்புகளையும், கல்வியையும் மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில் ஒருமுகப்படுத்துவதே எனது நோக்கம். எனது இத்தனையாண்டு அனுபவமும், நான் பெற்ற நன்மதிப்பும் உலக நாடுகளுடன் கைகோர்த்து செயல்பட வழிவகுக்கும் என்று நம்புகிறேன்!