உலக சினிமா ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்தால் ஒரு சின்ன ஒற்றுமை அதில் இழையோடும். கதையின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் அதில் பெரும்பாலும் ஹீரோக்களைக் காட்டிலும் வில்லன்களாகவே இருப்பார்கள். பிரபல கதாசிரியர்கள், இயக்குநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஐசக் அஸிமோவ்

“நீ என்னைப் படைத்தவனாகவே இருக்கலாம். ஆனால் நான்தான் உன் எஜமான். நீ நிம்மதியாக வாழவேண்டுமென்றால் எனக்கு இணையாக இன்னோர் பெண் வடிவத்தை உருவாக்கிவிடு! ”

உலகின் முதல் அறிவியல் புனைகதை என்று போற்றப்படும் மேரி’ஃப்ரேன்கன்ஸ்டைன்’-ல் வரும் காட்சி இது. பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி 1818ல் எழுதிய கதை இது.செயற்கை நுண்ணறிவின் தந்தையாகப் போற்றப்படும் ஐஸக் அசிமோவ் அவர் எழுதிய  அறிவியல் புனைகதையிலெல்லாம் ’ஃப்ரேங்கன்ஸ்டைன் காம்ப்லெக்ஸ்’ என்ற உளவியல் சிக்கலையே தொடர்ந்து மையமாக வைக்கிறார். அதாவது ஒரு எந்திரன் தன்னைப் படைத்தவனுக்கே தீங்கு விளைவிக்கும் செயல்களைச்செய்வது.

பேட்மேனும்- ஜோக்கரும்

பேட்மேன் எனும் காமிக் கதாபாத்திரத்தைத் திரைப்படமாக எடுக்க முயன்றபோது கிரிஸ்டோஃபர் நோலான் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை வலிமைப்படுத்தவே இரண்டு கதாசிரியர்களுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்தார். ஹீத் லெஜ்ஜரையடுத்து ஜோக்கராக ஜோக்வின் ஃபீனிக்ஸ் நடித்து வெளிவந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் பூர்வகதையில் சமூகத்தின் மீதான அவனது கோபம், ப்ரூஸ் வெயினுடைய பெற்றோரின் அகால மரணத்திற்கும் அதற்கும் உள்ள தொடர்பு எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

டேன் பிரவுன் கதைகள்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டேன் பிரவுன் எழுதிய த்ரில்லர்கள் ’டா வின்சி கோட்’, ’ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்’ போன்ற திரைப்படங்களாக சக்கை போடு போட்டன. தன் பதின்ம காலங்களில் படித்த ஹார்டிபாய்ஸ் நாவல்களும், சிட்னி ஷெல்டன் எழுதிய ‘டூம்ஸ்டே கான்ஸ்பிரசி’யும்  தன்னுடைய கதைக்களத்தை அமைத்துக்கொள்ள எப்படி உதவின என்பதை மாஸ்டர் க்ளாஸில் அவர் எடுக்கும் பயிற்சி வகுப்பில் விவரிக்கிறார். கதை எழுத ஆசைப்படும் எவரையும் வில்லன் கதாபாத்திரத்தை முதலில் வடிவமைக்கச் சொல்லி அவர் அறிவுறுத்துகிறார்.

ஷங்கர்-சுஜாதா

நான் வடிக்கும் பாத்திரங்களில் ஹீரோவைவிட வில்லனைத்தான் மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள். காரணம் ஹீரோவுக்கான இலக்கணம் ஒரு சட்டகத்துக்கு உட்பட்டது. சமூகம் பார்க்க விரும்பும் நல்லவன் அவன். ஆனால் வில்லனுக்கு எல்லைகளே கிடையாது. ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதங்கத்தை, குமுறலை பிரதிபலிப்பவன் அவன். சுஜாதா போன்ற மேதைகள் அதைக் கதையாகவும், வசனமாகவும் எழுதும்பொழுது காட்சியின் வீச்சு எங்கோ போய்விடுகிறது.

இப்போது புரிந்திருக்கும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் ஏன் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் வில்லன் வேடங்களில் ஒப்பந்தமாகிறார்கள் என்று. சரிதானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here