தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் புகழ் ஜிபி முத்துvவை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து திடீர் ஞானோதயம் பெற்ற ஜிபி முத்து, தான் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிக்டாக் புகழ் ஜிபி முத்துவை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.