ஆங்கிலத்திலும் வடமொழியிலும் அளவான செலவில் நிகழ்த்தப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளை  வரையறுக்க ‘ஜுகாட்’ என்ற வார்த்தையை உபயோகிப்பார்கள். தமிழிலும் அதற்கு இணையான ஒரு வார்த்தையுண்டு. அது குயுக்தி.

அமெரிக்காவை மிஞ்சிய இந்திய மருத்துவர்கள்

கொரோனாவிற்கு தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவரும் உலக நாடுகளின் மருத்துவர்கள் முதலில் தற்காப்பிற்காக என்ன செய்யலாம் என்று முருகன் வழி சென்று அதற்கும் மருந்து கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் பொழுதில் இங்கு இந்திய மருத்துவர்கள், குறிப்பாக தமிழகத்தில் மூச்சுத் திணறலுடன் வருபர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு, சோதனைக் கிட்டுகள் போதாத காலகட்ட த்திலும் மலேரியா சிகிச்சையில் முக்கியமான மருந்தான ஹைட்ராக்ஸிக்ளோரோக்வினைனை பயன்படுத்தி  கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட பலரை சத்தமே இல்லாமல் காப்பாற்றினார்கள்.


அமெரிக்கப் பிரதமர் ட்ரம்ப் இதே விஷயத்தை நாங்களும் கண்டுபிடித்துவிட்டோம் பெயர்வழி என்று தம்பட்டம் அடிக்காத குறையாக செய்தி வெளியிட்டதன் விளைவாக அரிதான அந்த மருந்தை மல்லிகைப் பொருள் வாங்குவதுபோல பொதுமக்கள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவிடம் அமெரிக்கா மருந்திற்காகக் கையேந்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. இதனால் உண்மையிலேயே அந்த மருந்து தேவைப் படுபவர்களுக்குத் தட்டுப்பாடாகி அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாகின. அதன் பிறகு இந்தியாவின் ஐசிஎம்ஆர்  இதுபோன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை பறிபோவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அறிக்கை வெளியிட்டவுடன்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

பிரிட்டனுக்கும் முந்தி

அதேபோல்தான் இப்போது பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் டெக்ஷாமெதாசோன் என்ற ஒருவகை ஸ்டெராய்டைப் பிரயோகித்துப் பார்த்ததில்  கொரோனா பாதிப்பால் மூச்சுத்திணறலுடன் வருபவர்களை 40% வரை காப்பாற்றுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழக மருத்துவர்கள் 2 மாதங்களுக்கு முன்னர் இருந்தே இதற்கு தங்கை வகையறா ஸ்டெராய்டு ஒன்றை(மெதில்ப்ரெட்னிசொலோன்) உபயோகித்து நல்ல முடிவுகளை எட்டியுள்ளனர். அதனால்தான் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மற்ற மாநிலங்களுடம் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

பொதுமக்களுக்கு கோரிக்கை

இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர் பரந்தாமனிடம் கேட்டபொழுது,“அறிக்கைகள் வெளியிடுவதைவிட உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதைவிட இதுபோன்ற தகவல் கசிவுகளால் கேன்ஸர், ஆட்டோ இம்யூன் நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு முக்கியமான இதுபோன்ற ஸ்டெராய்டுகள் கிடைக்காமல் போய்விடும்” என்று பதிலளித்தார்.


அதனால் பொது மக்களுக்கு நாம் வைக்கும் ஒன்றே ஒன்றுதான் சாதாரண சளி, இருமலுக்கெல்லாம் மருந்துக்கடைகளுக்குச் சென்று ஸ்டெராய்டு கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here